News

Thursday, 27 October 2022 11:12 AM , by: Elavarse Sivakumar

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைக்கு மாணவர்கள், இணைய தளத்தில் விண்ணப்பிக்க 31ந் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

8 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும்,  படிப்பை நிறுத்திய மாணவர்கள் கல்வியை தொடர ஏதவாகவும், மத்திய அரசு சார்பில், இந்தக் கல்விஉதவித் தொகை வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உதவித் தொகையை பெறலாம்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்காக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 31 கடைசி நாளாகும். இந்த திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 8 ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் தொடர்ந்து கல்வியை தொடர்வதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

லட்சம் மாணவர்களுக்கு

ஆண்டுதோறும் 1 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தேசிய கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
கல்வியைத் தொடரவும், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தகுதி

  • பெற்றோரின் ஆண்டு வருமானம் 3லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.

  • இதற்கான தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது 7 ஆம் வகுப்பு தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

  • பட்டியல் இன மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)