சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பாக அப்பள்ளியில் படிக்கும் சுற்றுப்புற மாணவர்களுக்கு சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பேருந்தினை கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பாக பள்ளியில் படிக்கும் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவர்களுக்காக சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பேருந்து வழங்கும் நிகழ்ச்சி பேரவையின் ஒருங்கிணைப்பாளரான விடுதலை செழியன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் படிக்க: இன்றைய வேளாண் செய்திகள்: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், பனையூர் பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் ஆகியோர் பங்குபெற்று நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தனர்.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது என்றும், அதனால், அரசு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகக் கல்வி பயில வேண்டும் எனவும் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
மேலும், பெற்றோர்கள், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு எங்களை நம்பி அனுப்பி வையுங்கள் என்றும் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, நம்பிக்கையும் ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!
வேளாண் செய்திகள்: விவசாய இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு