News

Wednesday, 14 July 2021 03:51 PM , by: Aruljothe Alagar

Salary Increment

2019 கடைசியில் கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் ஆரம்பம் ஆனது. அப்போது ஏற்பட்ட பெரும் பாதிப்பால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது செய்யப்போகிறார்கள் என்ற பல்வேறு தகவல்களும் வதந்திகளும் வேகமாக பரவியது.

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இப்போது வரை காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் பென்சனர்களும் ஆனந்தப்படுத்தியது.

நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் ஜூலை மாதம் முதல் முழு அகவிலைப்படி நிலுவைப் பணம் அனைத்தும் கிடைக்கும் என்று கூறியிருந்தார். இவ்வாறு கூறியிருந்த போதிலும் ஜூலை மாதம் வந்துவிட்ட நிலையில் அகவிலைப்படி எந்தவிதமான உயர்வும் கிடைக்கவில்லை.

கொரோனா தொற்று பரவல் குறைந்துக் காணப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் அகவிலைப்படி முழுப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. மேலும் இதனால் செப்டம்பர் மாதம் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும். கிளாஸ் 1 அலுவலர்களுக்கு சம்பள உயர்வு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பல்வேறு பிரிவுகளில் ஊதிய உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

ஜூலை 31-ந் தேதிக்கு பிறகு கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை

பலாப்பழத்தில் இருக்கும் நோய் தீர்க்கும் பலன்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)