1. வாழ்வும் நலமும்

பலாப்பழத்தில் இருக்கும் நோய் தீர்க்கும் பலன்கள்.

KJ Staff
KJ Staff

Palapazham

இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவில் மக்களால் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு காரணம் பெரும்பாலான மக்கள் இனிப்பு சுவையை விரும்புகிறார்கள். உடலுக்கு தேவையான சத்துக்களையும் தருகின்ற உணவாக இருக்கிறது பழங்கள். தமிழர்கள் கருதிய மா, பலா மற்றும் வாழையை முக்கனிகளாக கருதுகின்றனர். இதில் தமிழக – கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட சுவையான “பலாப்பழம்” சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பலாப்பழம் நன்மைகள்

கண்பார்வை

பலாப்பழத்தில் வைட்டமின் “எ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிக முக்கியமானதாகவும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்ற கண்பார்வை சம்பந்தப்பட்ட  இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து

பலாப்பழம் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் பலாப்பழத்தை கட்டாயம் சாப்பிடுவது நல்லது. பலாப்பழம்  சாப்பிட்டால் உடலின் கடுமையான உழைப்பால் இழந்த சத்துகளை  உடனடியாக பெறலாம்

குடல் புற்று

 பல வகை புற்று நோய்களில் மனிதர்களின் குடலில் ஏற்படும் புற்று நோய் மிக கொடியது ஆகும். மேலை நாடுகளில் பலர் இறக்க காரணம் இந்த குடல் புற்று நோய். பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது

ரத்தசோகை

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைந்து காணப்படுவதால் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் எ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சக்தி கொண்டது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

தைராய்டு பிரச்சனைகள்

தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி என்று கூறப்படுகிறது. இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது. பலாப்பழத்தை அதிகம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகி நோய்களை தடுக்கிறது.

மேலும் படிக்க

ஊரடங்கு காரணமாக மரத்திலேயே பழுத்து வெடித்து வீணாகும் பலாப்பழங்கள்!

பலாப்பழம் அமோக விளைச்சல்- கொரோனாவால் விற்பனை பாதிப்பு!

முதல் அலையைத் தொடர்ந்து 2வது அலையிலும் சிக்கிய பலா விவசாயிகள்! - உரிய விலை கிடைக்காமல் வேதனை!!

English Summary: Benefits of Jackfruit which also cures diseases

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.