மதுரை பெண்கள் தனிச்சிறையில் காலியாக உள்ள சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடத்தை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்படுகின்றன. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை பெண்கள் தனிச்சிறையில் சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடம் ஒன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடம் பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவருக்கு) ஒதுக்கப்பட்டதாகும்.
சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடத்திற்கு 25.10.2022 அன்றைய நிலையில் குறைந்த பட்சம் வயது தகுதி 18 ஆகவும், அதிக பட்ச வயது (OC-32, BC & MBC -34, SC&ST, SCA-37) ஆகவும் இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை.
இப்பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும் (Honoranium Basis Pay Rs. 15000/- per month). தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஜாதிச்சான்று மற்றும் மேற்படி பணியிடம் தொடர்பான பயிற்சிபெற்ற சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவர்: சிறைக்கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, மதுரை - 16. என்ற முகவரிக்கு 15.12.2022-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: