News

Friday, 11 September 2020 07:04 PM , by: Elavarse Sivakumar

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோக மையத்தின் சார்பில் காவேரி கூக்குரல் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடியே ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலக்காக வைத்து பயணித்து வரும் காவேரி கூக்குரல் இயக்கத்தினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று மரக்கன்றுகளை நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக,  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், இந்த இயக்கம் மற்றும்ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி சார்பில்,  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

Credit : You Tube


அவருடன் அறந்தாங்கி வட்டாட்சியர் திரு. மார்ட்டின் லூதர் கிங், கிராம நிர்வாக அலுவலர் திரு. இளமாறன் மற்றும் ஈஷா தன்னார்வலர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். ஆவணத்தாந்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் மற்றும் அய்யனார் கோவில் வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணிகள் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாக விவசாயிகளிடம் மரம் வளர்க்கும் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!

சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் வேளாண் பட்டயப்படிப்புகள்- மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)