தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. எவ்வளவு காலிப்பணியிடங்கள்? தேர்வு எப்போது? முதலான பல விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு எனத் தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதோடு, இடைநிலை பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆணையினைச் செப்டம்பரில் வெளிடிட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
2022-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பினைக் கடந்த மார்ச் 7-ஆம் நாள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் மார்ச் 14-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசமானது வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
ஆனால், தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31-ஆம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் ஒன்றுக்கான முதற்கட்டத் தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை, அனுமதிச் சீட்டு வழங்குதல் முதலானவைகள் குறித்த விரிவான வழிக்காட்டுதல்கள் ஆகஸ்டு 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க