News

Tuesday, 16 February 2021 11:30 AM , by: Elavarse Sivakumar

பருவ காலம் தவறிய தட்பவெப்ப நிலை காரணமாக ஏற்படும் பயிர்களின் பாதிப்பிற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

பருவ காலம் தவறிய தட்பவெப்ப நிலை (Unseasonable climatic conditions) காரணமாக ஏற்படும் பயிர்களின் பாதிப்பு பேரிடர் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு அதிகாரம் (Power to State Governments)

எனினும் பேரிடர்கள் என்று கருதப்படும் இயற்கை பேரிடர்கள் மாநிலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டால் மற்றும் பேரிடர்கள் என்று உள்துறை அமைச்சகம் அறிவிக்காத நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரண உதவியை வழங்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10 சதவீதத்தைப் பயன்படுத்திக்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டம் (Insurance plan)

தேசிய பேரிடர்களால் பயிர்கள் நாசமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக விளைச்சலின் அடிப்படையில் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (prime minister fasal bima yojana) மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2016 முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின்கீழ் விளைச்சலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பாதிப்புகளுக்கு விரிவான காப்பீடு வழங்கப்படும்.பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் 2018-19ம் ஆண்டு தமிழகத்திற்கு ரூ. 2.624.7 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் 18.5 லட்ச விவசாயிகள் பயனடைந்தனர்.

காப்பீட்டுத் தொகை (Sum Assured)

2019-20ம் ஆண்டு தமிழகத்திற்கு ரூ. 10026 கோடி காப்பீடுத் தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் 11.3லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். நாட்டில் மொத்தமாக 2019-20ம் ஆண்டு ரூ.23,645 கோடி, காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு 211.6 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 2020- 21ம் ஆண்டில் ரூ 312 கோடி காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டதன் மூலம் 5.1 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.


இந்தத் தகவலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....

சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)