1. செய்திகள்

நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

KJ Staff
KJ Staff
PM Narendra Modi
Credit : Dinamani

உணவு தானிய உற்பத்தியில் (Food grain production) தமிழக விவசாயிகள் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி (PM Modi) உரையாற்றினார்.

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் ரெயில் பாதை

தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும். கல்லணை கால்வா சீரமைப்பால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் பயனடையும். அர்ஜூன் பீரங்கி தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவெடுக்கிறது. கொரோனா (Corona) காலத்திலும் மெட்ரோ ரெயில் (Metro Rail) திட்ட விரிவாக்கப்பணிகள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் ரெயில் பாதை (Washermenpet-Wimco Nagar railway line) குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பாராட்டு:

நீராதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். நீர் மேலாண்மையில் (Water Management) சிறந்து விளங்கி, உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது தமிழகம். கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தினால், தஞ்சை, புதுக்காட்டை மாவட்டங்கள் பயனடையும். இந்திய மீனவர்களை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம்; மீன்பிடி தொழிலுக்கான (fishing industry) உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன” என்று இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

English Summary: PM Modi praises Tamil Nadu farmers for making better use of water bodies Published on: 14 February 2021, 07:19 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.