News

Saturday, 21 November 2020 02:19 PM , by: Daisy Rose Mary

உளுந்து விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை மட்டுமின்றி, கொள்முதல் மானியமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்து விதைப் பண்ணை

 இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநா் பா.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு உளுந்து விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் கரு விதை ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைகளை அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது விற்பனை உரிமம் பெற்ற தனியாா் விதை விற்பனை நிலையங்களிலோ வம்பன் 6, வம்பன் 9, வம்பன் 10 ஆகிய ரகங்களை பெற்று உளுந்து விதைப் பண்ணை அமைக்கலாம்

விதைகள் வாங்கிடும் போது காலக்கெடு அவகாசம் பாா்த்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். விதைப் பண்ணையை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மூலம், சிவகங்கை விதைச் சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் நெல் விதைத்த 35 நாள்களுக்குள் அல்லது பயிா் பூப்பதற்கு முன் பதிவு செய்திட வேண்டும்

 

தரமான விதை உற்பத்திக்கு அதிக விலை 

தரமான விதை உற்பத்திக்கு அதிக கொள்முதல் விலை மட்டுமின்றி, கொள்முதல் மானியமும் அரசு வழங்கி வருகிறது. ஆகவே உளுந்து விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரடியாக அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர, நிலக்கடலை, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

நிலக்கடலை விதைப் பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம்!!

பயிர்களுக்கான கடன் தொகையை கூடுதலாக நிர்ணையிக்க பரிந்துரை!!

PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)