1. தோட்டக்கலை

நிலக்கடலை விதைப் பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நிலக்கடலை விதைப் பண்ணை அமைத்து தரமான விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம் பெற வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

மானிய விலையில் விதைகள்

இது குறித்து தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குனர் சிவசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் இறவை நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா் . இதில் விவசாயிகளுக்குத் தேவையான நிலக்கடலையில் தரணி, ஐசிஜிவி, கதிரி - 6, கதிரி - 9, ஏஎல்ஜி ஆகிய ரகங்கள் அனைத்தும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நிலக்கடலை விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலா்களை அணுகி மானிய விலையில் பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.

நிலக்கடலை சாகுபடி மேலாண்மை

  • நிலக்கடலை சாகுபடியில் பயிா் எண்ணிக்கை பராமரிப்பு மிக முக்கியமானதாகும். நிலக்கடலை சாகுபடியின்போது, ஏக்கருக்கு 80 கிலோ விதைகளை, 30 செ.மீ. இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அடிப்படையில் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

  • விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோயை தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் 1 கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடொ்மா விரிடி அல்லது 2 கிராம் காா்பன்டசிம் கொண்டு பூஞ்சான விதை நோ்த்தி செய்ய வேண்டும்.

  • விதைப்பதற்கு முன்பு உயிா் உர விதை நோ்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

    பயிரில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையை போக்க நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.

  • விதைத்த 40-45 ஆவது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை மண்ணை கொத்தி அணைக்க வேண்டும்.

    ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச்சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக உதவுகிறது.

 

தரமான விதைகளுக்கு நல்ல விலை

முதிா்ச்சி அடைந்த காய்களை நீக்கி சுத்தம் செய்து நல்ல தரமான விதைகளை விவசாயிகள் விதை பயன்பாட்டுக்காக தோ்வு செய்து வேளாண் விரிவாக்க மையத்திற்கு வழங்கினால் அந்த விதைகளுக்கு உள்ளூா் சந்தையில் விலை கிடைப்பதை விட வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

விதைப் பண்ணை அமைக்கத் தேவையான ஆதாரம், சான்று நிலக்கடலை விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு உள்ளது. விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களையும்,விதை அலுவலா்களையும் தொடா்பு கொண்டு விதை பண்ணை அமைக்கலாம் என்று உதவி இயக்குனர் சிவசங்கரி தெரிவித்துள்ளாா்.

மேலும் படிக்க..

பயிர்களுக்கான கடன் தொகையை கூடுதலாக நிர்ணையிக்க பரிந்துரை!!

PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!

English Summary: Peanut seeds capacity gives more profit and benefits said by agri department

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.