டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது
தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. நாளுக்கு நாள் டாஸ்மாக் வருமானமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 24 ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 23 ஆம் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் ஆகியவற்றில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க