
11 month Baby Award Winning
பிறந்து பதினொன்றே மாதங்களில் பல்வேறு சாதனை படைத்த சுட்டி குழந்தை இவர் தான்.. பெற்றோர்களின் முயற்சியும் குழந்தையின் புத்தியும் அறிவும் உலகளவில் கொண்டு போய் பல்வேறு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்த பெறில் ஹெர்மன் பியான்ஷா தம்பதிகள்.
இவர்களின் 11 மாத குழந்தை அற்றி ஹெர்மன் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை பெற்றோர்கள் கூற 233 பொருட்களை சரியாக இனம் கண்டு எடுத்து அகில உலக அளவில் சாதனை படைத்து இவரது பெயர் வேல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன் , இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட் ,கலாம் வேல்டு ரெக்காட்ஸ்,மேஜிக் புக்காப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
சுட்டி குழந்தை அற்றி ஹெர்மன் சாதனையை பாராட்டி கடந்த 15 தேதி சென்னையில் கலாம் விருது கிடைத்துள்ளது குழந்தையின் பெற்றோர்கள்தான் இந்த குழந்தையின் பயிற்சியாளராக இருந்துள்ளனர் இந்த குழந்தையின் தந்தை கேரளமாநிலம் எர்ணாகுளம் அப்பல்லோ டயர்சில் வேலைபார்த்து வருகின்றனர்.
மேலும் பல சாதனைகள் படைக்க தயாராகும் இந்த குழந்தை அடுத்ததாக 195 நாடுகளின் கொடியை காட்டினால் எந்த நாட்டின் கொடி என சொல்லி கொடுக்க பயிற்சி நடந்து வருகிறது. பிறந்து பதினொன்றே மாதங்களில் பல்வேறு சாதனைகளை படைத்த இந்த குழந்தைக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
Share your comments