பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. தட்டுப்பாடு எதானால் ஏற்படுகிறது? இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? தீர்வுகள் என்ன? முதலான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமாகச் சென்னையில் சமையல் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை இயக்கப்படுகின்றது. இந்த ஆலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சமீபத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட உத்தரவில், சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் ஆலை இனி 75 சதவீத உற்பத்தியில் மட்டுமே ஈடபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாகச் சமையல் எரிவாயு உற்பத்தி குறையும் என்று அஞ்சப்படுகிறது. பெட்ரோலியம் டீலர்கள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் இந்த விஷயத்தில் கவலையுடன் உள்ளன.
இந்த ஆலையில் சுத்திகரிப்புச் செய்யப்படும் 10.5 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்பது தமிழகம் முதலாக பிற அண்டை மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப் போதுமானதாக இருக்காது எனக் கூறப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள இந்தக் கட்டுப்பாட்டால் உற்பத்தி குறைந்து விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான சிலிண்டர் டெலிவரியில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகள் தற்காலிமனது என்பதால் விரைவில் பிரச்சினையினைச் சரிசெய்து முழுவீச்சில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்” தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!