முல்லைப்பெரியாறு அணையில் நீர் குறைவாக இருப்பதால், தமிழகத்தின் தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இதனால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனினும் ஆரம்ப நாட்களில் எதிர்பார்த்த்தைவிட குறைவான மழை பெய்ததால், முல்லை பெரியாறு அணையில் சேமிக்கப்படும் நீரின் அளவு குறைவாகவே உள்ளது.
முல்லை பெரியாறு நீர் மட்டம்
142 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், தற்போது 112 அடியாக உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் மட்டம் 118 அடிக்கு மேல் இருக்கும்போது மட்டுமே, நெல் சாகுபடிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
பொதுவாக ஜூன் 1ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 600 கனஅடி நீரானது, ராட்சதக் குழாய்கள் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டிய தமிழகத்தின் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நெல் சாகுபடிக்காக திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால் நீர்மட்டம் 116 அடிக்கு கீழ் இருந்தால், மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பது பொதுப்பணித்துறை கடைப்பிடிக்கும் விதி. ஒருவேளை நீர் மட்டம் 104 அடிக்கு கீழ் இருக்குமாயின், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்தவிடப்படாது.
முதல் போக சாகுபதி பாதிப்பு
அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, நெல் முதல் போக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தேனி மாவட்டத்தில், மிகக்குறைந்த அளவிலான நெல் சாகுபடியே செய்ய முடிந்தது.
தண்ணீர் தட்டுப்பாட்டால், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, தற்போது தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, நிலத்தை பயிரிடாமல், சும்மா வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Elavarase Sivakumar
Krishi jagran
மேலும் படிக்க...
ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!
இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!