News

Thursday, 14 April 2022 06:52 AM , by: R. Balakrishnan

Show speed in vaccination work

கொரோனா வைரஸின் அடுத்த பரிணாமம் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வைரஸ் இந்தியாவில் நுழையாமல் தடுக்க வேண்டும். அதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு. உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான் எக்ஸ்.இ.,' பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 'தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டு உள்ளார்.

தடுப்பூசி (Vaccine)

கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் எக்ஸ்.இ., வகை வைரஸ் பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சர்மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணிக்கவும், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், நிடி ஆயோக் உறுப்பினர்வி.கே.பால், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன்,'எய்ம்ஸ்' இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க

நோய் பல தீர்க்கும் அத்தி மரத்தின் சிறப்பான பயன்கள்!

கவனம் தேவை: தலையணை இல்லாமல் தூங்கினால் நலமே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)