Skill Training: Apply for a certificate equivalent to class 10th and class 12th
தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசாணை (நிலை) எண்.34 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எஸ்.1) துறை, நாள் 30.03.2022ல் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ம் தொகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் பெறுவதற்கு நிலையான வழிகாட்டுதல்கள் கீழ்காணும் விவரப்படி வழங்கப்படுகின்றன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2000 குறித்து முக்கிய அப்டேட்!
அரசு தேர்வுகள் இயக்கத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடத்த பெற்ற மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் (SOP) ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதார்கள், திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். எஸ்.வினீத் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விண்ணப்ப படிவத்திற்கு - இங்கே கிளிக் செய்யவும்.