பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 September, 2020 7:11 PM IST

புரட்டாசிப்பட்டம் சின்ன வெங்காயத்திற்கு ஏற்றதாக உள்ளநிலையில், இந்த முறை சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு 38 முதல் 40 ரூபாய் வரை இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

நாட்டின் வெங்காயம் பயிரிடும் மொத்த பரப்பளவில் தமிழ்நாடு 5 சதவீதம் பங்களிக்கிறது. அதிலும், சின்ன வெங்காயம் பயிரிடும் பரப்பளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது.

சின்ன வெங்காயம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் சாகுபடி மற்றும் வர்த்தகத்தில் தமிழகத்திற்கும், கர்நாடகாத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

32000 ஹெக்டேர் (32000 ha)

தமிழ்நாட்டில், சின்ன வெங்காயம் கடந்த மூன்று ஆண்டுகளாக 32,000 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு சின்னவெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு தமிழ்நாட்டின் தேவை 7 லட்சம் டன்னாக உள்ளபோதிலம், மூன்று இலட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

வர்த்தக மூலங்களின் படி, சின்ன வெங்காயம் மூன்று முக்கிய பருவங்களான வைகாசி புரட்டாசி மற்றும் தைப்பட்டம் ஆகிய பருவங்களில் பயிரிடப்பட்டு சேமிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கிறது. தற்போது புரட்டாசி பட்டம் தொடங்கியுள்ளது.

மேலும் சந்தைக்கு சின்ன வெங்காய வரத்தானது பெரம்பலூர், துறையூர் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிலிருந்து அதிகமாகவும் கர்நாடகா மாநிலம் மைஞர் மற்றும் கொல்லிகள் ஆகிய பகுதிகளிலிலிருந்து குறைந்த அளவும் வருகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் விழா காலங்களில் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆப்பு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்னவெங்காயத்தின் விலையையும் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

விலை கணிப்பு (Pricing)

ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போதுவெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 38 முதல் 40 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் வரத்தைபொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத்தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை-641003
தொலைபேசி - 0422-2431405லும்,

தொழில்நுட்ப விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் -641003
தொலைபேசி எண் - 0422-6611374லும் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க...

அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத் தவிர்க்க மானியம் - நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!

உருளைக்கிழங்கை உங்கள் வீட்டு மாடியிலும் வளர்க்கலாம் - சாகுபடிக்கான யுக்திகள்!

English Summary: Small onion price forecast- Tamil Nadu Agricultural University Prediction!
Published on: 17 September 2020, 06:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now