Solar storm, the possibility of hitting the earth today
பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்பு உள்ளது என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார்.
சூரிய புயல் (Solar Storm)
பூமியை, சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலுமாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. செயற்கை கோள் மற்றும் தொலைபேசி இடையேயான ஜிபிஎஸ் எனப்படும் ரேடியோ அலைகள் பாதிக்கப்படும் என்றும் அதனால் ஜிபிஎஸ் சேவை பாதிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த சூரிய புயல் இன்று காலையிலேயே பூமியை தாக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரிய புயலை ஜி என்ற எழுத்தால் அளவிடப்படுகிறது. இதில் ஜி1 என்பது மிதமான புயல் என்பதும் ஜி5 மிகவும் ஆபத்தான சூரிய புயலாகவும் அளவிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கனடாவை சூரிய புயல் தாக்கிய நிலையில், இன்று நேரடியாக மிகப்பெரிய சூரிய புயல் தாக்கப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க: விதைகள் 50% மானியத்தில்! யாரை அணுக வேண்டும்?
விஞ்ஞானிகளின் கணிப்பு நடந்தேறினால், உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவது உறுதியாகும். காலையில் சூரிய புயல் தாக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாக்குதல் நடக்கவும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க
சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!
இந்த செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்!