மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்ட் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கால்நடை விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.55,000 வருமானம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாட்டுச் சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி. பழங்காலம் முதல் இக்காலம் வரையில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து வீட்டு வாசல்களில் தெளித்து வரும் பழக்கம் இருந்து வருகிறது. மாட்டு சாணம் இயற்கை உரமாகவும், சுற்றுச்சூழல் மாசு இல்லாத எரிப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிராப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்துவதற்காக மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கல்லா கட்டும் "கடக்நாத்" - கருங்கோழி வளர்ப்பின் வளமும் நலமும்..!
வேதிக் பெயிண்ட் (Vedic Paint)
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட வேதிக் பெயிண்ட் (Vedic Paint) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயிண்ட் கொண்டது. இதன்மூலம் கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் நிதின் கட்கரி பதிவிட்டுள்ளார். நான்கு மணி நேரத்தில் உலரும் வகையில் தயாராகும் இந்த பெயிண்ட் டிஸ்டெம்பர் மற்றும் குழம்பு வடிவத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.