
ஜனவரி 3 ஆம் முதல் 15 வயதிற்கு மேற்பட்ட டீனேஜர்களுக்கான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி, எப்போது வரும் என்று மக்களிடையே எழுந்து வரும் கேள்விகளுக்கு, பிப்ரவரி இறுதிக்குள் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pfizer Inc மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த BioNTech SE ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த, தடுப்பூசியை செவ்வாய் கிழமையன்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசி பிறந்து ஆறு மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியாகும். இதை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கக் கோரி ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களும் கோவிட் வைரஸில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக தடுப்பூசியை உற்பத்தி செய்து, செலுத்தி வரும் நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எழுந்த கேள்விக்கான விடையாக Pfizer நிறுவனம் கொரோனா தடுப்பூசியை அங்கீகரிக்க மனு அளிக்க உள்ளது. இதன் அடிப்படையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த மாதம், அதாவது பிப்ரவரி மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி பற்றிய தரவை கட்டுப்பாட்டாளர்கள் மதிப்பாய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு மருந்து நிறுவனங்களை FDA வலியுறுத்து இருப்பது குறிப்பிடதக்கது. இதன் அறிக்கையும் சமீபத்தில் வெளியானது.
இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மருந்து ஆய்வு நிறுவனங்களிடம் கேட்கப்பட்ட போது, Pfizer, BioNTech மற்றும் FDA ஆகிய எந்த நிறுவனமும் உடனடியாக எந்த பதிலையும், அறிக்கையையும் வழங்கவில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் மதிப்பாய்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை வரும் ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என சில வாரங்களுக்கு முன்னதாக Pfizer நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தத் தடுப்பூசி அமெரிக்காவில் தான் தற்போது கிடைக்கிறது என்ற தகவலும் குறிப்பிடதக்கது.
இந்தியாவை பொறுத்தவரை 18 வயதுக்கு, மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு கோடிக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர், என்பதும் அனைவரும் அறிந்ததே. தற்போது முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதும் தொடங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்குட்பட்ட டீனேஜர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளின் மூலம் கோவிட் வைரஸ் முதல் டோஸ் ஜனவரி மூன்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் பற்றி எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக இல்லை, என்பது குறிப்பிடதக்கது.
ஆனாலும், கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கும் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை விரைவில் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும், மக்களிடையே இருந்து வருகிறது.
மேலும் படிக்க:
இ-பாஸ்போர்ட் 2022-23ல் வெளியாகும்: அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
WFH செய்பவர்களே கவனிக்கவும்: Vi-இன் அதிரடி திட்டம் அறிவிப்பு