News

Thursday, 14 April 2022 12:32 PM , by: Poonguzhali R

Special Train Service Between Nagore and Ernakulam Begins!

நாகூர்- எர்ணகுளம் கோடைக் காலச் சிறப்பு ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட உள்ளது.  நாகூர்- எர்ணாகுளம் ரயிலைப் புதுக்கோட்டை வழியாக இயக்க திமுக எம்.பி. அப்துல்லா கோரிக்கை வைத்திருந்தார்.  இந்நிலையில் இது புதுக்கோட்டை வழியாகவே இயக்கப்பட உள்ளது. 

நாகூரிலிருந்து எர்ணக்குளம் செல்லும் எர்ணக்குளம் விரைவு ரயில் திங்கள் முதல் ஞாயிறு வரை உள்ள அனைத்து நாட்களிலிலும் மாலை 4.50-க்கு நாகூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு எர்ணக்குளத்தைச் சென்றடைகிறது.  இது காரைக்காலிலிருந்து புறப்பட்டு, நாகூர், நாகப்பட்டிணம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், பூதலூர், திருச்சிராப்பள்ளி, குளித்தளை, கருர், புகலூர், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு வழியாக எர்ணக்குளத்தைச் சென்றடைகிறது. 

தினம் செல்லும் விரைவு ரயிலுடன் இனிக் கோடைக் காலச் சிறப்பு ரயிலும் நாகூரிலிருந்து எர்ணாக்குளம் வரை இயக்கப்பட உள்ளது.  இது மக்களின் கோடைக்காலப் பயணத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பயண நெருக்கடியைத் தவிர்க்கும் நிலையிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  வார நாட்களில் பணிமுடிந்து விடுமுறைக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் எனப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.    

இந்த கோடைக்கால சிறப்பு ரயில் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.  இந்த சிறப்பு ரயில் சனி தோறும் 12.25 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு ஞாயிறு மதியம் 12:15 மணிக்கு நாகூர் வந்தடையும் அதே போல் ஞாயிறு தோறும் 13:45 மணிக்கு நாகூரில் புறப்பட்டு திங்கள் காலை 9:25 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். 

தற்பொழுது சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ள நாகூர் – எர்ணக்குளம் வரை செல்லும் சிறப்பு ரயில் சில காலங்களில் நிரந்தர ரயிலாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என ரயில்வே வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.  இவ்வாறு நிரந்தர ரயிலாக இது மாற்றப்பட்டால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.  பயண நெருக்கடியும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 12ம் வகுப்பு!

Indian Railways News: ரயில்வே பயணிகளுக்கு ஒரு சிறந்த Offer! அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)