News

Sunday, 12 June 2022 12:39 PM , by: Poonguzhali R

Special Trains Running ahead of RRB Exam

ஜூன் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்ட லெவல் 2க்கான ரயில்வே வாரியத் தேர்வுகளின் இரண்டாம் கட்டத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களின் நலனுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்-ஆனது எண். 06046 திருநெல்வேலி முதல் பெங்களூரு வரை இயங்க உள்ளது. RRB சிறப்பு ரயில் ஜூன் 13 அன்று இரவு 11 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திரும்பும் திசையில், ரயில் எண். 06045 பெங்களூரு-திருநெல்வேலி RRB சிறப்பு ரயில் ஜூன் 17 அன்று பெங்களூரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி உங்க காட்டில் பணமழைதான்! அதிக வருவாய் தரும் SB அக்கவுண்ட்!

ரயில் எண். 06047 தூத்துக்குடி - கர்னூல் டவுன் RRB சிறப்பு ரயில் ஜூன் 13 அன்று மதியம் 12 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு கர்னூல் நகரைச் சென்றடையும். ரயில் எண். 06047 கர்னூல் டவுன் - தூத்துக்குடி RRB சிறப்பு ரயில் ஜூன் 17 அன்று இரவு 7.30 மணிக்குக் கர்னூலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்குத் தூத்துக்குடி சென்றடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யர்ரகுண்ட்லா, தாடிபத்திரி, துரோணாசலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

ரயில் எண். 06056 கொல்லம் - திருச்சி RRB சிறப்பு ரயில் ஜூன் 13 அன்று கொல்லத்தில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும். ரயில் எண். 06055 திருச்சி - கொல்லம் RRB சிறப்பு ரயில் ஜூன் 17 அன்று திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்குக் கொல்லத்தைச் சென்றடையும். இந்த ரயில்கள் திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!

இந்த ரயில்களில் இரண்டு அடுக்கு ஏசி, இரண்டு மூன்று அடுக்கு ஏசி, ஏழு ஸ்லீப்பர், ஐந்து பொது பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி பெட்டிகளுடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

உச்சம் தொடும் கொரோனோ தொற்று: தமிழகத்தில் 1 லட்சம் கொரோனோ தடுப்பூசி முகாம்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)