சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 April, 2022 4:32 PM IST
State Awards for Handicraftsmans!!!

கைவினைத் தொழிலுக்கு என்றே தங்கள் வாழ்வை அர்பணித்த கலைஞர்களுக்கு, அதிலும் குறிப்பாக 65 வயதுக்கும் மேற்பட்ட சிறந்த கைவினைக் கலைஞர்கலூக்குத் தமிழக அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்” எனும் விருதும், தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைக் கலைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்பு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு “பூம்புகார் மாநில விருது” எனும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. 

அதன்படி 2021-2022-ஆம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் எனும் விருதானது, பத்து கலைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருது எனும் விருதானது, பத்து கலைஞர்களுக்கும் என மொத்தமாக இருபது விருதாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்விருதுகளைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். 

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது என்பது.  ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கம், தாமிரப்பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவைகளை உள்ளடக்கியது அதே போன்று, பூம்புகார் மாநில விருது என்பது ரூ. 50ன் ஆயிரம் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கம், தாமிரப்பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவைகளை உள்ளடக்கியது.

விருதாளர்களும் அவர்களின் பிரிவுகளும்:

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதாளர்கள்

மாரிமுத்து  -  தஞ்சாவூர் கலைத்தட்டு, முத்துச்சிவம் -  கோயில் நகைகள்

மாரியப்பன்  -  தஞ்சாவூர் ஓவியம், கமலம் -  இயற்கை நார் பொருட்கள்

தங்க ராஜா  -  வீணை கைத்திறத் தொழில், வடிவேல் – கடல் சிற்பம்

விசுவநாதன்  -  பஞ்ச லோகச் சிற்பம், விஜய வேலு -  சுடுகளிமண் பொம்மை

ராமலிங்கம்  - காகிதக் கூழ் பொம்மை, பிரணவம் - ஸ்தபதி பஞ்சலோகச் சிற்பம்.

பூம்புகார் மாநில விருதாளர்கள்

கதிரவன் -  மரச்சிற்பம், தென்னரசு – தஞ்சாவூர் ஓவியம்

சகாயராஜ் -  மரச்சிற்பம், கோபு -  பஞ்சலோகச் சிலை

யுவராஜ் -  மரச்சிற்பம், ராதா -  நெட்டி வேலை

நாகப்பன் -  கற்சிற்பம், மகேஷ்வரி -  காகிதப் பூ பொம்மைகள்

ராஜேந்திரன் -  வீணை கைத்திறத் தொழில்

செல்லம்மை -  இயற்கை நார் பொருட்கள்

இவ்விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத் தலைவர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் சுகாரத்துறை முதன்மைச் செயலாளர் தர் மேந்திர பிரதாப் யாதவ் முதலானோர் பங்கேற்றனர். 

மேலும் படிக்க...

மிகப்பெரிய பவர் பேங்க்: வியப்பை ஏற்படுத்திய வெல்டர்!

குழந்தைகளுக்கும் அவசியம் தேவை பொழுதுபோக்கு!

English Summary: State Awards for Handicraftsmans!!!
Published on: 14 April 2022, 04:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now