News

Monday, 04 July 2022 08:40 PM , by: R. Balakrishnan

75th Independence day

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17 ஆம் தேதி வரை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைக்க கர்நாடக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாகக் கொண்டாட ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுதந்திர தின விழா (Independence day)

75 ஆம் ஆண்டு பவளவிழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கர்நாடக உயர்கல்வித் துறை மந்திரி அஸ்வத் நாராயணன், மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேசியக் கொடி (National Flag)

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்க பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்ட் 11 முதல் 17ம் தேதி வரை மூவர்ண தேசியக் கோடியை ஏற்ற வேண்டும்.

‌மாநிலத்தின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ-ன் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பெறாத கல்லூரிகள் நமது தேசியக்கொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.

இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரியப்படுத்த, அந்தந்த கல்வி நிர்வாகங்கள் தங்களது அறிவிப்புப் பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நீங்கள் வாங்கும் ரூபாய் நோட்டுக்கள் இப்படி இருக்க? அப்போ செல்லாது!

கூட்டுறவு வங்கி வழியாக மாணவியருக்கு ரூ.1,000 உதவித்தொகை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)