பெண் ஓட்டுனர்கள் மானிய விலையில் ஆட்டோ பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்றவர்கள் வியக்கும் வகையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆட்டோ ஓட்டும் அசாத்தியத் திறமை கொண்டவர்களா நீங்கள்? அப்படியதானால் இந்த செய்தி உங்களுக்குதான்.
மானியத்தில் ஆட்டோ
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தகுதிகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 வயதிற்கு மேல் 60 வயதிற்கு உட்பட்ட பெண் ஓட்டுனர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ள பெண்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி
விண்ணப்பத்தினை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கி முழுமையாக பூர்த்தி செய்து திருவண்ணாமலை காந்திநகர் 8-வது தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வளர்மதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!