1. செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை- விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார்.  விரைவில் இந்தத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

வாக்குறுதி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

விமர்சனம்

எனவே இதனைக் காரணம் காட்டி,  தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.

கேள்வி

தி.மு.க வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அமைச்சர் தகவல்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.

மேலும் படிக்க…

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: Rs.1,000 incentive for heads of households - details inside! Published on: 31 December 2022, 09:13 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2023 Krishi Jagran Media Group. All Rights Reserved.