நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 June, 2023 3:48 PM IST
Subsidy for new industries! Tamilnadu minister announcement!!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமைய்யில் மாவட்ட தொழில்ல் மையப் பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் ல்கிண்டி சிட்கோ தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ. 5 லிருந்து ரூ.15 லட்சமாகவும் அரசின் மானியம் ரூ.1.25 லிருந்து ரூ.3.75 லட்சமாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு புதிய அறிவிப்பாக அறிவிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தர விசைத் தறிகள் தங்கள் உற்பத்தி திறனை மேம்படுத்திக் கொள்ளுவதற்கு உயர் தொழில்நுட்பம் சார்ந்த நாடா இல்லாத நெய்தலுக்கான கருவிகலைப் பொருத்த 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தித் தங்களது விசைத்தறி கூடங்களை நவீனமாக்கி கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாய விளை பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கவும், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விளை பொருட்கள், அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் வியாபாரம் இவற்றுக்கு இன்றியமையாத குளிர்பதன கிடங்கு மற்றும் குளிர்சாதனப் போக்குவரத்து தொழில்களைச் சிறப்பு தொழில் வகையின் கீழ் சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, குண்டடம், உடுமலைபேட்டை, பேராவூரணி, கே.பரமத்தி ஆகிய இடங்கலில் தென்னை நார் கயிறு குறுங்குழுமங்கள் அரசு அமைத்துள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள MSME நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தென்னை நார் உலர்த்தும் கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்களுக்கு முதலீட்டு மானிய திட்டத்தின் அடிப்படையில் 25 சதவீதம் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசுக்கு இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், துணை புரிந்து தமிழகத்தைத் தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு துறை அலுவலர்கள் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த அமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும் படிக்க

மாவட்ட கலை மன்ற விருதுகள்! இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

15 புதிய விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு|ரூ.45 லட்சம் ஒதுக்கீடு|வேளாண் அமைச்சர் தகவல்!

English Summary: Subsidy for new industries! Tamilnadu minister announcement!!
Published on: 02 June 2023, 03:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now