வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் கருவிகள் வாங்க ரூ.5 லட்சம்
மதுரை மாவட்டத்தில், இந்தாண்டு வேளாண் துறையின் கீழ் 54 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் மற்றும் தோட்டக்கலை துறையின் கீழ் 27 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் தலா 5 லட்சம் ரூபாய் மூலதன நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்குழுவில் உள்ள விவசாயிகள் ஒன்று கூடி பேசி தேவையான வேளாண் கருவிகளை வாங்கிக்கொள்ளலாம்.
அதிக கருவிகள் தேவைப்படும் இடத்தில் ஒரு குழுவினர் மற்ற குழுவினர் வாடகை முறையில் மாற்றி கொண்டும் மற்ற விவசாயிகளுக்கும் வேளாண் கருவிகளை வாடகைக்கு விடவும் ரூ.50.5 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
யாரை அணுக வேண்டும்
வேளாண் கருவிகளை வாங்க விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுவினர் அந்தந்த வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் உதவி இயக்குனர்கள் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!
அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!