உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிப்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள், காலாவதியான உணவு பொருள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர்.
அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்!
இதேபோல் பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். 4 கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் 27.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு, தலா 5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் என 4.5 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தரம் குறித்தும் ஆய்வு நடத்தினர். பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரித்து வழங்குவது குறித்தும் கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க..