News

Friday, 30 July 2021 02:34 PM , by: T. Vigneshwaran

Tamil Nadu corona update

இன்று தமிழ்நாட்டில் 1,859 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் மரணத்தின் எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 21,207 ஆக இருக்கிறது.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 21 பேர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் இறந்துள்ளனர். இன்றைய இறப்புகளுடன் சேர்த்து இதுவரை கொரோனா நோய் தொற்றால் மட்டும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,023-ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று 2,145 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மொத்தமாக 1,55,074 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,859  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:

ஜூலை 1ம் தேதி ஆம்னி பேருந்து சேவை- உரிமையாளர்கள் அறிவிப்பு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)