வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததுடன், ராகுல் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டங்களுக்கு எதிர்ப்பு (Opposition to the laws)
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்புல் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு செவி மடுக்க மறுத்ததால், கடந்த 8 மாதங்களாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை முடக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு முழுப்பலன் கிடைக்கவில்லை.
பேச்சுவார்த்தைத் தோல்வி (Negotiation failure)
இதையடுத்து மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை நடத்தப்பட்ட அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆதரவு (Supported by opposition leaders)
இந்நிலையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முகக்கவசம் அணிந்தபடி, அனைவரும் கைகளைக் கோர்த்தபடி போராட்டத்தில் பங்கேற்றதுடன், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதில் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
14 கட்சியினர் (14 parties)
இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, உள்ளிட்ட 14 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு (Support for farmers)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில்:
விவசாயச் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எங்களின் ஆதரவை தெரிவிக்கவே ஜந்தர் மந்தரில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கூடியுள்ளோம்.
பெகாசஸ் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அரசு அதறகு அனுமதிக்க மறுக்கிறது. ஒவ்வொருவரின் மொபைல் போனை, மோடி ஒட்டு கேட்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் பரபரப்பு (Stir in the fight)
விவசாயிகளின் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திடீரெனக் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பிரச்னை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் எதிர்க்கட்சித்தலைவர்களின் பங்கேற்பு வித்திடும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க...