சேலம் மாவட்டத்தில் செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் துவங்கி விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. முதலாகத் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்புகள் இடம் பெறாமல் இருந்து வருகிறது.
கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கையினைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்புகள் இடம்பெற்று இருக்கின்றன. அதன் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தகைய செங்கரும்புகள் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவில் சேலம் மாவட்டத்தில் தான் அதிகமாக பயிரிடப்படுகின்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் முதலான பகுதிகளில் பயிரிடப்படும் செங்கரும்புக்கு தற்போது அரசிடம் இருந்தும் வெளி மார்க்கெட்டிலும் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களில் இருக்கின்றன. தற்பொழுது வெளி மாவட்டங்களுக்கும் ரேஷன் கடைகளுக்கும் கரும்பினை அறுவடை செய்து அனுப்புகின்ற பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி போன்ற பகுதிகளில் செங்கரும்பு அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. அவற்றை 25 கரும்புகள் கொண்ட கட்டுக்களாக கட்டப்பட்டு லாரிகள் ஏற்றப்பட்டு வருகின்றது. கரும்புக்கு தற்போது நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் கரும்பை அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருவது வழக்கமாக இருக்கின்றது.
கரும்பு அறுவடை பணிகள் தற்போது அனைத்து இடங்களிலும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். அது மட்டும் இல்லாதது சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் கொண்டாட மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிடப்பட்டது. அதோடு, கரும்புக்கு கூடுதல் மவுசும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் கரும்பு விளைச்சல்அதிகரித்து இருக்கிறது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாகவும் இனிப்பான பொங்கலை இந்த வருடம் விவசாயிகள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க
iPhone bumper sale: ரூ.21 ஆயிரத்துக்கு ஐபோன்! இன்றுமுதல் சூப்பர் ஆஃபர்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு!