News

Saturday, 14 May 2022 10:46 AM , by: Elavarse Sivakumar

கோடை வெயிலைக் கருத்தில்கொண்டு, கோடை விடுமுறை ஜூன் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் மே 15 முதல் மே 31 வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-
அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மே 15 முதல் மே 31 வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும்.

மே 15 முதல் மே 31 வரை, தொடக்கப் பள்ளி நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் செயல்படும்.

இதைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுத்தக் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பற்றி எரிகிறது பஞ்சு விலை- கேண்டி லட்சம் ரூபாயை எட்டியது!

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)