தாட்க்கோ மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்டர் போர் ஏரோஸ்பாஸ் ரெசெர்ச் (CENTRE FOR AEROSPACE RESEARCH) மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரொன் கருவி பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் அவர்கள் தகவல்.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மாணாக்கர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு/ITI /டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டபடிப்பில் தேச்சி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் உரிமம் ஆற்றும் மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும், பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் பத்து நாட்கள் அளிக்க படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,000 தாட்க்கோ மூலம் வழங்கபடும்.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் திரையில் காணும் இணையத்தளத்தில் http://www.tahdco.com/ பதிவு செய்து கொள்ளலாம்.
2,பொங்கல் பரிசு வழங்கல் தொடக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கும் பணியினை தொடங்கி வைப்பதற்காக நேற்று கடற்கரை சாலை, சத்யா நகரிலுள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினையும் இலவச வெட்டி சேலையினையும் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
3, நாமக்கல் மாவட்டத்தில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா அவர்கள் இருப்பு செய்தார். இருப்பு செய்தபின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.1.24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பனி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்ட உள்நாட்டு மீனவர்களின் வருவாயை கணிசமாக அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
4, டெல்லி NCRஇல் ரெட் அலெர்ட்
டெல்லி-என்சிஆர் பகுதியில் அடர்த்தியான மூடுபனி நீடிக்கிறது, தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது.
காலை 9 மணிக்கு, தில்லி விமான நிலையம் விமானச் செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய அடர்ந்த மூடுபனியால் பயணிகளை எச்சரித்து, விமானத் தகவல்களுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
திங்கள்கிழமை அதிகாலையில் டெல்லி-என்சிஆர் பகுதியில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால், தேசிய தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. காற்றின் தரமும் மிகவும் மோசமானது , தனியார் பள்ளிகள் விடுமுறையும் நீட்டிக்கப்பட்டது.
5, கோயம்பேடு அங்காடி வளாகத்தில் இயற்கை விவசாய பொருட்களுக்கான தனி அங்காடி
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி அமைப்பது தொடர்பாக தொட்டகலை துறை மற்றும் வேளாண்மைத்துறையினரிடம் கருத்து பெறப்பட்டு இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி விரைவில் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தகவல்.
6, தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் நெற்கொள்முதல் நிலையம் திறப்பு
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் "தமிழ் நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் எல்லா நிலையிலும் ஆரோக்கியமானதாக இருந்து வருகிறது. அங்கங்கே ஒரு சில சங்கங்களின் நஷ்டங்கள் எதிர்காலத்தில் சரி செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.
7,கேரளாவில் பரவியது பறவை காய்ச்சல்
கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது, இதனால் 2000 வாத்து, கோழிகளை கொள்ள முடிவு செய்யப்பட்டது, இந்த பகுதியில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
8, பொங்கல் விழாவிற்க்காக அகப்பை தயாரிக்கும் பணி தீவிரம்
தஞ்சை அருகிலுள்ள வேங்குராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் அந்த கிராம மக்கள் . இதற்காக அந்த கிராமத்தில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தினத்தன்று காலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்கி விடுவார்கள். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர் . இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
9, இன்றைய காய்கறி விலை
- தக்காளி-ரூ.25
- உருளைக்கிழங்ங்கு -ரூ.35
- பெரிய வெங்காயம் -ரூ.24
- சிறிய வெங்காயம் -ரூ.90
- வெண்டைக்காய் -ரூ.80
- பச்சை மிளகாய் -ரூ.25
- தேங்காய் -ரூ.25
- கேரட் -ரூ.35
- காலிபிளவர் -ரூ.30
- கத்திரிக்காய் -ரூ.35
- பீட்ரூட் -ரூ.35
10, வானிலை அறிக்கை
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்.மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிககளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
அய்யயோ! பரவுகிறது பறவை காய்ச்சல்-பயத்தில் கேரளா
1000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்! 1 கோடி சேமிப்பு பெறலாம்!!