2022 ஆகஸ்ட் 12, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னை தீவு மைதானத்தில் 3 நாள் உணவுத் திருவிழா 2022 நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையும், ஈட் ரைட் இந்தியாவும் இணைந்து நடத்தும் இவ்விழாவில், கடைசி நாளான்று நடைப்பயணமும் அடங்கும்.
ஈட் ரைட் இந்தியா என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மூலம், இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு எதிர்மறையான ஊட்டச்சத்துப் போக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கான முன்முயற்சி ஆகும்.
ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022'-இல் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களும் தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை, இந்த உணவுத் திருவிழா வழங்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருவிழாவில் ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும். உணவுத் திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும். அதிகாரிகளின் கூற்றுப்படி, மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
சென்னையில் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ் குமார், இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது ஆனால் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
"2019 ஆம் ஆண்டில், நாங்கள் மதராசப்பட்டினம் உணவுத் திருவிழா என்ற பெயரில் ஒரு உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்தோம்." இந்த திருவிழாவில் கிட்டத்தட்ட 90% பொருட்கள் பாரம்பரிய உணவு வகைகளாக இடம்பெறும் என எண்ணியிருந்தோம். இது ஒரு உணவு கண்காட்சியை ஒத்திருக்கும்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த உணவுத் திருவிழாவை மாவட்டங்கள் வாரியாக நடத்துவது போல் வடிவமைத்திருந்தோம், ஆனால் கொரோனா காலம் நம்மை கட்டிவிட்டது. இம்முறை தோராயமாக 150 ஸ்டால்கள் அமைக்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்காக சுமார் பத்து ஸ்டால்களை வைக்க உள்ளோம். "உணவுத் திருவிழாவில் பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெறுவார்கள்" என்று குமார் கூறினார்.
திருவிழாவில் குழந்தைகளும், தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்துவார்கள். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா உட்பட அனைத்து பிரபலமான உணவகங்களுக்கும் உணவுத் திருவிழாவில் ஸ்டால்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க: