தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் முதுகலை கல்லூரிகள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தடையற்ற கல்வியைத் தருவதில் வல்லமை பெற்றது. மேலும் இணைய வழி மூலம் கற்பித்தலும், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்த கல்வியை மாணவர்கள் சமுதாயத்திற்கு நல்குவதிலும் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. 33 மேற்படிப்பு மற்றும் 29 ஆராய்ச்சி படிப்புகளின் தேர்வுகளை இணையவழி மூலமாக வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது.
கல்லூரிகள் திறப்பு (Colleges open)
மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பாடநெறிப்பணிகளையும், மாணவர்களின் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு 02.12.2020 முதல் ஆராய்ச்சிக் கூடங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வீதிகளின்படி திறப்பதுக்கு அனுமதி அளித்து பல ஆராய்ச்சிகளை தொடங்குவதற்கும்,வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கும் ஆணையிட்டது.
இதனை ஏற்று அனைத்து வேளாண்மை உறுப்பு கல்லூரிகளும், மாணவர்களுக்கு
பாதுகாப்பான விதிமுறைகளை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது என முதுகலை முதன்மையர் முனைவர் ஜா.சா.கென்னடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு தேதி - அறிவித்தது TNAU!
உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த உயிரியல் முறை சிறந்தது- ஆய்வில் கண்டுபிடிப்பு!