News

Sunday, 01 November 2020 10:33 AM , by: Elavarse Sivakumar

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

தமிழக வேளாண்துறை அமைச்சர் பதவி வகித்துவந்த துரைக்கண்ணு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த மாதம் 13-ம் தேதி காரில் சேலம் நோக்கி புறப்பட்டார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து  உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ( Treatment)

தொடர்ந்து  மேல் சிகிச்சைக்காக,  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சருக்குகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா நோய் தொற்று இருப்பது  தெரியவந்தததால், அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நுரையீரலில் 50 சதவீதம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து துரைக்கண்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மரணம் (Dead)

இந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், நேற்று இரவில் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

துரைக்கண்ணுவின் மரணத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்களும், பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

TNAU வில் அஞ்சலி

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின்  மரணச்செய்தி  வெளியான நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் முனைவர் நீ.குமார், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் புகைப்படத்திற்கு, அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க...

மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!

PMKSY : ஒரு துளியில் அதிக மகசூல் திட்டத்திற்கு ரூ.400 கோடி - டெல்டா விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)