சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் மழை (Rain in Chennai)
சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, ஆலந்தூர், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக நல்ல மழை பெய்தது
வண்டலூர், பெருங்களத்தூர், புழல், திருவள்ளூர் மேடவாக்கம், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூரில் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. அதேபோல் வேலூர், காட்பாடி, கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு (TN expects Rain)
இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணிநேரத்தில் வடகடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பாத தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை பொழிவு (Rainfall in Last 24 hours)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனாவில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை (Warning for Fisherman)
-
மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசும்.
-
வரும் 6ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
-
வரும் 7ம் தேதி வரை அதேபோல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
இதனால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் படிக்க...
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!