சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 June, 2020 2:32 PM IST

தென் மேற்கு பருவக்காற்று காரணமாகக் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

4 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கோவை, நீலகிரி, தேனி, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தென் மேற்கு பருவக்காற்று காரணமாக ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் நாளை, ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் , அதிகப்பட்ச வெப்பநிலை 38 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • இன்று 15 முதல் ஜூன் 19 வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • அதே போல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • இன்று மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மத்தியமேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • மேலும் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3.2 முதல் 3.6 மீட்டர் வரை ஒரு சில நேரங்களில் எழும்பக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் 3 செ.மீ, தேவாலா, வால்பாறை, அவலாஞ்சி, சோலையார், சின்கோனா ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Credit By : Just Nashik

இந்திய வானிலை மையம்

இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழையும், தெற்கு மத்தியப்பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் மற்றும் மராத்வாடா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட அரபி கடல், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளிலும், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், மத்திய அரபிக்கடல், வடகிழக்கு அரபி கடலின் சில பகுதிகள், குஜராத், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் இன்னும் சில பகுதிகள், மகாராஷ்டிராவின் மீதமுள்ள பகுதிகள், மத்தியபிரதேசத்தின் சில பகுதிகள், பெரும்பாலான பகுதிகளுக்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?

 

English Summary: Tamil Nadu and Puducherry will receive rains in the next few days, the India Meteorological Department
Published on: 15 June 2020, 02:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now