MFOI 2024 Road Show
  1. வாழ்வும் நலமும்

அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit by: Indian med

கீரைகள் என்றாலே பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் இயற்கையாகவே உள்ளதால் தான் அனைத்து மருத்துவர்களும் கீரைககளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். கீரைகளில் பல வகை இருப்பினும் ஒவ்வொருன்றுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது . அந்த வகையில் அனைத்திற்கும் முதலான அகத்திக் கீரை குறித்து இதில் தெரிந்து கொள்ளலாம்.

அகத்திக் கீரை நாடு முழுவதும் பயிரிடப்படுகிறது. இருப்பினும் இதன் தாயகம் மலேசியா. அகத்தி பார்ப்பதற்கு மரம் போன்று காணப்பட்டாலும் அவை செடியினத்தைச் சார்ந்தது. அகத்திச் செடி மிக விரைவில் வளரக்கூடிய பயிர் வகையைச் சார்ந்தது, ஆயினும் நீண்ட நாட்கள் வாழக்கூடிய தன்மை பெற்றிருக்கவில்லை. அகத்திச்செடி நீர் தாங்கிய நிலப்பரப்பில் பயிர் செய்யப்படுகிறது.

அகத்தி கீரை (Agathi keerai) வகைகள்

அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன. இதில், சாழை, பேரகத்தி மற்றும் சிற்றகத்தி ஆகிய மூன்றும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். அகத்தியும், செவ்வகத்தி இந்த இரண்டும் பொதுவாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

அகத்தியின் சத்துகள்

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீதம் கொழுப்பும், 3.1 சதவீதம் தாது உப்புகளும் இருப்பதாக வேளாண் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மாவுச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் A, கால்சியம் ஆகியவையும் அடங்கியுள்ளன.
அகத்தி மரத்தின் வேர், பூ, இலை மற்றும் பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. இது உடலின் உட்புற மற்றும் வெளிப்புறத்திற்கும் (Internal and External use) மருந்தாக பயன்படுகிறது

Image credit by: Samayam Tamil

வயதானவர்களுக்கு

இதில் வைட்டமின்- சி (Vitamin-C) உள்ளதால் , நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் தேவை என்றாலும் முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் .எனவே அவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்திக் கொள்ள முடியும் . இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனோ போன்ற நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை . அதற்கு எங்கும் எளிதில கிடைக்ககூடிய அகத்தியை எடுத்துக் கொண்டால் போதுமானது.

பெண்களுக்கு

அகத்தி கீரையில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால் இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால் பால் சுரப்பி தூண்டப்பட்டு அதிக அளவில் பால் சுரக்கும்.

சிறுவர்களுக்கு

உடல் வள்ர்ச்சிக்கு தேவையான புரதம் (Protein) இதனுள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் .மேலும் இதில் சுண்ணாம்பு (Calcium ) சத்தும் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகளுக்கு பலம் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் முதுமையில் வரமால் தடுக்கலாம்.

செரிமானத்தை சீராக்கும் அகத்தி

இதில் நார்சத்து உள்ள காரணத்தினால் செரிமானத்தை சீராக்கும் ஆற்றலை பெற்றது. உடலில் செரிமானம் சரியாக இருப்பின் கழிவுகள் முறையாக வெளியற்றப்டுவதுடன் பசியையும் முறையாக தூண்டும். முன்னோர்கள் சொல்வழக்குப் படி , பசித்தால் மட்டும் சாப்பிடு என்பர். .பசி எடுத்து சாப்பிட்டாலே நாம் மற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

கண்களை குளிர்ச்சியாக்கும் அகத்தி

இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.

Image credit by: Dinamani

உடல் உஷ்ணத்தை போக்கும் அகத்தி

இன்று பலருக்கு வெளியில் சென்று வேலை செய்யும் காரணத்தினால் உடல் உஷ்ணமாக இருக்கும். அகத்தியானது உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு , உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய குடல்புண் , வாய்ப்புண் போன்ற வற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

இரத்த அழுத்தத்திற்கு

இளம் பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இரத்த அழுத்த நோய் பரவலாக காணப்படுகிறது. அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும் .

தோல் நோய்களுக்கு

அகத்தியுடன் தேங்காய் மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளான சொறி, சிரங்கு, தேமல் போன்றவை முற்றிலும் குணமாகும். அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள் , அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்

அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியத்தோடு வாழுங்கள்

அதிக சத்துக்களை அகத்தி பெற்று இருந்தாலும் , அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றபடி இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. அதிகமாக எடுத்து கொண்டால் இரத்தம் கெட்டு போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கீரையை மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது. ஏனெனில் பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும். வாயு கோளாறுகள் உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது. ஆகவே, அளவோடு சாப்பிட்டு வளமுடன் வாழ அகத்தியை பயன்படுத்துவோம்.

மேலும் படிக்க
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
உங்கள் ஆயுளை நீட்டிக்க இதை சாப்பிடுங்கள் போதும்!!
உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!

English Summary: Lets get to know about the Amazing Health benefits of Sesbania grandiflora called as Agathi keerai Published on: 11 June 2020, 01:25 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.