தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரவிருக்கும் நாட்களில் மிதமான மழை இருக்கும். மேலும் இடங்களின் விவரம் கீழே பதிவில் காணாவும்.
இன்று பிப்ரவரி 19:
தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 20:
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 21:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகரி) சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 22:
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ( தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகரி) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கு ஏச்சரிக்கை
அந்தமான கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கீ.மீ., வேகத்தில் வீசக்கூடும் என கணிக்கப்படுகிறது, எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க:
இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் சந்தைக்கு, பிரதமர் ஆதரவு உறுதி!
PF கணக்கு வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை! இந்த தவறுகளை தவிர்க்கவும்!