தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.3.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பால்வளத் துறை சார்பில் காக்களூர் பால் பண்ணையில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டிடம், மீன்வளத் துறை சார்பில் ரூ.8.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கானொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழக முதலமச்சர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நிகழச்சியின் மூலம் கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மேம்பாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கட்டிடங்களை திறந்துவைத்தார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நுகர்வோருக்கு தரமான பாலினை நியாயமான விலையில் விற்பனை செய்திடவும், மீன் உற்பத்தியை அதிகரித்து, மீன்வளத்தைப் பாதுகாத்து, மீன்பிடி துறைமுகங்கள் / மீன் இறங்குதளங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசானது, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கால்நடை மருத்துவ கட்டிடங்கள்
-
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனை கட்டடம்
-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கள்ளியூர் கிராமத்தில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டிடம்
-
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம்.
-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பிரதம மருத்துவமனை கட்டிடம் மற்றும் தியாகதுருகத்தில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவனை கட்டிடம்
கால்நடை தீவன கிடங்க
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பால் பண்ணையில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டிடம்,
மீன்வளத்துறை கட்டிடங்கள் திறப்பு
-
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணை பகுதியில் அமைந்துள்ள மீன் விதை பண்ணையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகம்
-
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகராட்சி, ஓலைக்குடா பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்திற்கான ஆய்வு மாளிகை, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம் மற்றும் கடல் உணவு உணவகம்
-
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மீன் ஏலக்கூடம்
-
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், ஆத்தூர் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு மையம்
மொத்தம் 12 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும் படிக்க
வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான இந்திய அரசின் திட்டங்கள்!
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!