பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 August, 2020 7:06 PM IST
Credit : Dinamalar

ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ. 99.60-லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் 4.40 லட்சம் ஹெக்டேரில் (4.40 lakh hectares) தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices) பரிந்துரையின்படி, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கு ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.99.60 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

2018-ம் ஆண்டில் கஜா புயல் (Gaja cyclone) மற்றும் 2019-ம் ஆண்டில் ருகோஸ் வைட்ஃபிளை (Rugose Whitefly) பூச்சித்தாக்குதல் ஆகியவற்றால் கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அறுவடை, போக்குவரத்து, அறுவடை செய்யப்பட்டதை சேமித்தல் ஆகியவற்றுக்காக தென்னை விவசாயிகள் கணிசமான செலவுகளை செய்கின்றனர். மேலும், தற்போது கரோனா ஊரடங்கால் (Corona Lockdown) கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை, போக்குவரத்துத் தடைகள் ஆகியவற்றால் மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் சந்தை விலை ரூ.110 ஆக உள்ளது. இதனை கருத்தில் கொண்டால், கொப்பரை தேங்காய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதார விலை ரூ.99.60 போதுமானதாக இருக்காது.

Related link: 
கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி

நெல், ராகி மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சாகுபடி செலவில் 150% என இந்திய அரசு நிர்ணயித்துள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எனவே, தென்னை விவசாயிகளுக்கும் போதுமான ஆதார விலையை வழங்க வேண்டும்.

ஆதார விலையை ரூ.125 ஆக உயர்த்த வேண்டும்

எனவே, கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum
Support Price) ரூ.99.60-லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... 

விழுப்புரத்தில் வேர்க்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியம்!!

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!

வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை

 

English Summary: Tamil Nadu Chief Minister Writes letter to the Centre to Increase MSP for Copra to 125rs per kg
Published on: 19 August 2020, 06:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now