மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 June, 2021 12:13 PM IST
Credit : Times of India

தமிழகத்தில், கொரோனா ரைவஸ் பரவல் குறைந்து வருவதை முன்னிட்டு, பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

அரசு அதிரடி (Government Action)

இதையடுத்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த குடிமகன்கள், தமிழக- கேரள எல்லையில் உள்ள மதுக்கடைகளில் குவிவதால், அந்தக் கடைகளை அதிரடியாக மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

படிப்படியாகத் தளர்வுகள் (Gradual relaxations)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வழக்கத்திற்கு மாறாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த மே மாதம் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தினசரி பாதிப்புகள் வேகமாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் அனுமதி இல்லை (Tasmac is not allowed)

அதன்படி, தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி இல்லை.

பிற மாவட்டங்களில் அனுமதி (Permission in other districts)

மற்ற மாவட்டங்களில் டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவையும் அடங்கும். இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட குடிமகன்கள் வேறு மாவட்டங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

நீண்ட வரிசையில் (Long queue)

குறிப்பாக கோவை அருகே உள்ள கேரள மாநிலத்தின் பாலக்காட்டிற்கு தமிழக குடிமகன்கள் சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். அங்கு பல மணி நேரம் காத்திருந்து மது வாங்கி செல்லும் நிலை காணப்படுகிறது.

வனப்பகுதி (Forest)

அதேநேரத்தில் நெடுஞ்சாலைகளில் சென்றால், போலீசாரிடம் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால், அடர்ந்த, வனப்பகுதி வழியைப் பயன்படுத்துவதாகத் கூறப்படுகிறது.

கேரளாவிற்கு புது ரூட் (New route to Kerala)

  • இதனைக் கண்காணிப்பதற்காக தமிழக - கேரள எல்லைப் பகுதியில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

  • கோவையில் இருந்து வாளையார் வனப்பகுதி வழியாக கேரள மாநில கிராமங்களுக்குள் ல்ல புது வழியை உருவாக்கி மதுபிரியர்களும் தற்போது தப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

நாளை முதல் தளர்வுகள் (Relaxations from tomorrow)

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கோவிட்-19 தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் நாளை (ஜூன் 24) முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

மதுக்கடைகளை மூடல் (Closing of liquor stores)

அதன்படி, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இருமாநில எல்லையோர மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோகத்தில் குடிமகன்கள் (Citizens in grief)

கேரள அரசின் இந்த அறிவிப்பு தமிழக மதுபிரியர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து இனிமேல் பிற மாவட்டங்களைக் குறிவைத்து சென்று, மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே போலீசார் மாவட்ட எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: Tamil Nadu citizens taking refuge in liquor stores on the state border - order to close immediately!
Published on: 23 June 2021, 12:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now