1. செய்திகள்

அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா?விரைவில் அறிவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த பல வண்ணம் உள்ளன.

தமிழகத்திலும் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கின்றது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் தொற்றின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் பல புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிக அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று கட்டுக்குள் இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்றே கூறலாம்.

தமிழக மாணவர்களின் கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. தொற்றுக்கு மத்தியில் துவங்கியுள்ள கல்வி ஆண்டில் பாடங்கள் இதுவரை ஆன்லைன் முறையிலேயே நடந்து வருகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உள்ளது.

இந்நிலையில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் ஜூலை 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தொற்று குறைந்துகொண்டிருக்கும் பிற மாநிலங்களும் இதை பின்பற்ற வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையில் சரிவு ஏற்படுவதால், ஜூலை மாதம் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த முயற்சிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளை திறந்தால், மாணவர்கள் ஒரே இடத்தில் கூடும் சூழல் ஏற்படும் என்பதால்,  இதில் அரசு எந்தவித அவசரமான முடிவுகளை எடுக்க விரும்ப வில்லை. பள்ளிகள் திறப்பதை பற்றி பரிசீலிக்கப்படும்போது, அரசு இந்த முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ளும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன:

தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் முதலில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது .

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் துவங்கப்படும், பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கான நேரடி வகுப்புகள் துவங்கப்படலாம்.

மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு அழைக்க படுவார்கள்.

இதற்கிடையில், தமிழக பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், நேற்று முன்தினம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பள்ளிகள் புத்தகங்களை வழங்கி இந்த செயல்முறை விரைவில் நிறைவுபெறும். மேலும், கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. புதிய முறைகள் தொடர்ந்து இணைக்கபட்டு வருகின்றன.

மேலும் படிக்க:

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!

English Summary: Will schools open next month? Announcement soon! Published on: 21 June 2021, 03:08 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.