News

Monday, 26 October 2020 12:22 PM , by: Daisy Rose Mary

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கன மழை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்க்கையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை பொழிவு 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 5 செ.மீ, உசிலம்பட்டி (மதுரை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 4 செ.மீ, ஆலங்குடி (புதுக்கோட்டை) 3 செ.மீ, மதுரை விமான நிலையம், முத்துப்பேட்டை (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), தளி (கிருஷ்ணகிரி), ஜெயன்கொண்டம் (அரியலூர்) தலா 2செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

 

மேலும் படிக்க..

எப்படி இருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு? - மருந்துவமனை விளக்கம்!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)