News

Thursday, 15 October 2020 02:49 PM , by: Daisy Rose Mary

தென் மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)
இரணியல் (கன்னியாகுமாரி), பெரியாறு (தேனி) தலா 5, சித்தார் (கன்னியாகுமாரி), குளச்சல் (கன்னியாகுமாரி) தலா 4 , வால்பாறை (கோவை), சின்னக்கல்லார் (கோவை), சுரலாக்கோடு (கன்னியாகுமாரி), பாபநாசம் (திருநெல்வேலி), பேச்சிப்பாறையில் தலா (கன்னியாகுமாரி) 3 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு வங்ககடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)