News

Friday, 31 March 2023 12:39 PM , by: Poonguzhali R

Tamil Nadu Irrigation Project Review! World Bank Officials Visit!!

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய உலக வங்கி அதிகாரிகள் வரும் வாரத்தில் தமிழகம் வர உள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

2,962 கோடி செலவில் ஏழு ஆண்டுகளில் (2018 முதல்) 5.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 66 துணை நீர்நிலைகளில் பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் தங்கள் வருகையின் போது சென்னை, கோவை மற்றும் மதுரை மண்டலங்களை ஆய்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

உலக வங்கி அதிகாரிகள், நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்து திட்டத்திற்கான தரவரிசைகளை வழங்கிய பின்னரே மீதமுள்ள நிதியை அரசு பாதுகாக்க முடியும் என்று அந்த அதிகாரி மேலும் எடுத்துரைத்தார். ஆய்வுகளின் போது, அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பணி தொடர்பான மக்களுடன் உரையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் 4,778 தொட்டிகள், 477 அணைக்கட்டுகள் மற்றும் தொட்டிகளில் செயற்கை ரீசார்ஜ் கிணறுகள் ஆகியவை அடங்கும் என்றும் மற்றொரு அதிகாரி கூறியிருக்கிறார். காவிரி டெல்டா மற்றும் பிற துணைப் படுகைகளில் வடிகால் மற்றும் பாசன வழிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

நீர்வளத் துறைக்கு ரூ.2,131.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள தொகை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. “கிட்டத்தட்ட 60% வேலையை முடித்துவிட்டதாகவும், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000! தமிழக முதல்வர் உத்தரவு!!

Turtle Walk: சென்னையில் ஆமை முட்டை சேகரிப்பு! ஏன் தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)