News

Saturday, 20 March 2021 09:31 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பலரும் ஆர்வமுடன் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வந்தனர்.

வேட்புமனுத்தாக்கல் நிறைவு (Nomination completed)

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டநிலையில், கடைசி நாளான நேற்று சுயேச்சைகள்தான் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 523 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதன் காரணமாக மொத்தம் 6 ஆயிரத்து 222 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளில் வேட்புமனு (Nomination on the last day)

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டநிலையில், கடைசி நாளான நேற்று சுயேச்சைகள்தான் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 523 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதன் காரணமாக மொத்தம் 6 ஆயிரத்து 222 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் சார்பில் 5 ஆயிரத்து 274 மனுக்களும், பெண்கள் சார்பில் 945 மனுக்களும், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சம் (Maximum)

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 90 பேர் 97 வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை, செய்யூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.கடைசி நாளான நேற்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள்  பரிசீலனை (Review of Candidates)

இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று நடைபெற உள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலினைபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே அந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முடிந்தவுடன், நிராகரிக்கப்பட்ட பெயர்களை தவிர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.

மார்ச் 22ம் தேதி 

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கருதினால், அவர்கள் தங்களது மனுவை 22-ந் தேதி மதியம் 3 மணிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.

அதன் பின்னர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. எனவே அதன் அடிப்படையில் 22-ந் தேதி மாலையில் தேர்தல் களத்தை சந்திக்க உள்ள வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினமே சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நடைபெறும்.

குலுக்கல் முறை 

சுயேச்சைகள் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களை வேட்புமனுவில் அளித்திருப்பார்கள். எனவே ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சைகள் கேட்டிருந்தால், குலுக்கல் முறையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெறும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப எத்தனை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பது தெரியவரும்.

மேலும் படிக்க...

தமிழகம் வர இனி E-Pass கட்டாயம்- அதிரடி உத்தரவு!

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை நிறமூட்டிகள்!

தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)